முருங்கை பூ தேநீர்: குடித்து பாருங்கள் அசத்தும் நன்மை இதோ

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

முருங்கையின் இலை, வேர், காய், பிசின், பூ என அனைத்திலும் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. அதில் முருங்கை பூவை தேநீராக தினமும் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ,

முருங்கை பூ தேநீர் செய்வது எப்படி?

முருங்கைப் பூவை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அதில் கற்கண்டு சேர்த்து சிறிது நேரம் கழித்து பாலை ஊற்றி கொதித்ததும் இறக்கி விட வேண்டும்.

முருங்கை பூ தேநீரின் நன்மைகள்
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் சக்தி முருங்கை பூவிற்கு உள்ளது. எனவே அடிக்கடி காய்ச்சல், சளி, ஆகிய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • முருங்கைப்பூ தேநீரை குடித்து வந்தால், இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படாது. இந்த பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடலாம்.
  • உடலுக்கு தேவையற்ற சுரப்பிகளால் ஏற்படும் வெள்ளைப்போக்கு பிரச்சனையை கட்டுப்படுத்த முருங்கைப்பூ தேநீரை அடிக்கடி குடிக்க வேண்டும்.
  • சர்க்கரை நோய் உள்ளவர்கள், இந்த முருங்கைப்பூ தேநீரை அடிக்கடி குடித்து வரலாம். இதனால் சர்க்கரை நோயை எளிதில் கட்டுப்படுத்தி குணமாக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்