பூசணிக்காயின் அற்புத மருத்துவ பலன்கள்

Report Print Arbin Arbin in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

வெள்ளைப்பூசணி, பல்வேறு சத்துக்களை தன்னுள்ளே வைத்திருக்கிறது. இதனைக் கொண்டு சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் பல மருந்துகளை தயாரிக்கிறார்கள். உடலை பலப்படுத்துவதிலிருந்து, புற்றுநோய் வராமல் தடுப்பதுடன் பல்வேறு அதிசயங்களை தன்னகத்தே வைத்திருக்கிறது வெள்ளைப்பூசணி.

பூசணிக்காய் சாறை, தினசரி 50 மி., சாப்பிட்டு வந்தால், தொடர் இருமல், குணமாகும். காலையும், மாலையும் சாறு குடித்து வந்தால், வலிப்பு நோயின் தீவிரம் குறையும்.

பூசணிக்காயின் விதைகளை சேகரித்து, நன்கு காய வைத்து பொடியாக செய்து, ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும், உடல் சூட்டைத் தணிக்கும், அதிகமான பித்தம் கட்டுப்படும்.

பூசணி சாறு, உடலில் உள்ள அமிலத்தன்மையை நீக்கும். உடல் சூட்டாலும், பித்தத்தாலும் உண்டாகும் வயிற்று புண், வாய்ப்புண், மூலம், சிறுநீர் சம்பந்தமான நோய்கள், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் போன்றவைகளுக்கு சிறந்த மருந்து.

வெள்ளைப்பூசணி, ரத்தத்தில் காரத்தன்மையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்வோர், தினமும் காலை ஒரு டம்ளர் வெள்ளைப்பூசணி சாறு பருகலாம். புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்பவர்கள், உடலில் உள்ள திசுக்கள் புத்துணர்ச்சி பெறும்.

சர்க்கரை நோயாளிகள், வெள்ளைப்பூசணி சாரில் உப்பு மற்றும் சீரகத்தூள் கலந்து பருக வேண்டும். பூசணி விதையில் உள்ள துத்தநாகச் சத்துக்கள், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இந்த விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆண்மையின்மை பிரச்னையை குணப்படுத்துகிறது.

பெண்கள், பூசணி விதையை நெய்யில் வறுத்து, தினமும் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும். பூசணி விதையில் கஷாயம் செய்து குடித்தால், வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்கும்.

பூசணி விதையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள், நமது உடம்பில் ரசாயன தாக்கத்தை தடுத்து, ஹார்மோன் மற்றும் நாளமில்லா சுரப்பிகளை கட்டுப்படுத்தி, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.

உடற்பயிற்சி செய்துவிட்டோ அல்லது அதற்கு முன்பாக சாப்பிடும் உணவுகளில் பூசணிக்காய் சேர்த்துக்கொள்வது நல்லது. ஏனென்றால் எலெக்ட்ரோலைட் சமநிலைக்கு இது பெரிதும் உதவும். காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்தவும் பூசணி மிகவும் ஏற்றது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்