டிராகன் பழம் பற்றி நீங்கள் அறிந்திராத நன்மைகள்

Report Print Arbin Arbin in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

டிராகன் பழம் பல வித நன்மைகளை கொண்ட ஒரு பழம். உடல் எடை குறைப்பு, செரிமான அதிகரிப்பு, கொலெஸ்ட்ரோல் குறைப்பு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவது, ஆற்றலை அதிகரிப்பது போன்றவை இதன் பயன்களாகும்.

நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஒரு சிறந்த ஆற்றலை கொடுப்பது இதன் முக்கியமான பலனாகும். வைட்டமின் சி யின் அளவு மிகவும் அதிகமாக இருப்பது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படும்.

உடலின் மிக பெரிய சொத்து இந்த வைட்டமின் சி. செல்களின் வளர்சிதை மாற்றத்தால் உருவாகும் ப்ரீ ராடிக்கல் எனும் அடிப்படை கூறுகளை அழிக்க இந்த பழத்தில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை உதவுகிறது.

இதனால் இதய நோய், புற்று நோய் போன்றவை தடுக்க படுகின்றன. வைட்டமின் சியை தவிர வைட்டமின் பி யின் குழுவும் அதிகமாக காணப்படுகிறது.

பி 1, பி 2, பி 3 ஆகியவை, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றன, சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன, கொலஸ்ட்ரால் அளவை குறைக்கின்றன.

நார்ச்சத்து மிகவும் அதிகமாக டிராகன் பழத்தில் இருக்கின்றன. ஆகையால் குடல் இயக்கங்கள் சீராக்கப்பட்டு, உணவுகள் செரிமான பகுதி சிறந்த செயலாற்றலுடன் இருக்கிறது.

இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. குடல் எரிச்சல் நோய் அல்லது குடல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளை தடுக்கிறது.

ஆக்சிஜெனேற்றத்தை தடுக்கும் தன்மையை வைட்டமின் சியுடன் சேர்த்து மற்ற ஆதரங்களிலும் மூலமாகவும் இயற்கையாக கொண்டுள்ளது இந்த டிராகன் பழம்.

இந்த பழத்தில் காணப்படும் கரோட்டின், புற்று நோய்க்கு எதிரான குணங்களை வெளிப்படுத்துகிறது. கட்டிகளின் அளவை குறைக்க உதவுகிறது.

நீங்கள் சோர்வாக இருக்கும் போது, அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்படும் போது, பருவ நிலை மாற்றத்தால் உடலில் மாற்றங்கள் ஏற்படும்போதும், புற்று நோய்க்கான அறிகுறிகள் தோன்றும்போதும் இந்த பழத்தை உட்கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்