வெள்ளை வெங்காயம் தெரியுமா? ஊளைச் சதையை குறைக்குமாம்!

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

வெங்காயத்தில் சிறியது மற்றும் பெரியது என்று இருவகை உள்ளது. அதில் வெள்ளை வெங்காயம் என்றும் ஒரு வகை உள்ளது. அதன் மருத்துவ நன்மைகள் இதோ,

வெள்ளை வெங்காயத்தின் நன்மைகள்
  • வெள்ளை வெங்காயத்தின் சாற்றுடன் வெள்ளரிக்காயின் சாற்றை சம அளவு கலந்து அடிக்கடி குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளைச் சதை குறையும்.
  • வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால், தாதுவிருத்தி உண்டாகும்.
  • வெள்ளை வெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்து நறுக்கி, நெய் விட்டு வதக்கி அதில் ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து தொடர்ந்து 5 தடவை சாப்பிட்டு வந்தால் மூலம், பவுத்திரம், ரத்தப்போக்கு ஆகிய பிரச்சனைகள் குணமாகும்.
  • கற்றாழை, பனங்கற்கண்டு, வெள்ளை வெங்காயம் சாறு, ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து சூடு செய்து சாப்பிட்டால், வயிற்றில் ரணம், மாந்தம், வயிற்றுவலி, புளிப்பு ஏப்பம், பொருமல், மற்றும் உஷ்ண வாய்வு போன்றவை குணமாகும்.
  • இரவு உறங்கும் போது படுக்கை அறையில் சுற்றிலும் வெள்ளை வெங்காயத்தை நறுக்கி வைத்தால், இரவு உறக்கம் மற்றும் சுவாசிக்கும் காற்று சுத்தமானதாக இருக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்