தினம் 3 உலர் அத்திப்பழம்: உடலில் உண்டாகும் அற்புதம் தெரியுமா?

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால், தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் பல அற்புதமான மாறங்களை காணலாம்.

உலர் அத்திப்பழத்தின் நன்மைகள்
  • மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகளை நீக்கி குடலின் இயக்கத்தை சீராக்க உதவுகிறது.
  • ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 47 கலோரிகளும், 0.2 கிராம் கொழுப்பும் உள்ளது, எனவே இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
  • உலர்ந்த அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாக இருப்பதால், உயர் ரத்த அழுத்தப் பிரச்சனையை தடுக்கிறது.
  • ப்ரீ-ராடிக்கல்களால் உடலின் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதை தடுத்து, இதய நோயின் தாக்கத்தைக் குறைக்கிறது.
  • ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 3% கால்சியம் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, எலும்புகள் வலிமையாகும்.
  • ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 2% இரும்புச்சத்து நிறைந்துள்ளது. எனவே உடல் முழுவதும் ஹீமோகுளோபினை எடுத்துச் செல்வதுடன், ரத்தசோகை வராமல் தடுக்கிறது.
  • அத்திப்பழத்தில் உள்ள ஜிங்க், மாங்கனீசு மற்றும் மக்னீசியம், கருவுறுதல் மற்றும் பாலுணர்ச்சியைத் தூண்டி, இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்