வெறும் வயிற்றில் நெல்லிக்காய்: வியக்கும் அற்புதம் இதோ

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasri.com

நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காயை ஜூஸ் செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

நெல்லிக்காயின் நன்மைகள்
  • உடலில் உள்ள புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கெட்டக் கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமன் ஆகாமல் தடுப்பதுடன், எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • ப்ரீ-ராடிக்கல் எனும் புற்றுநோய் செல்களின் பாதிப்பில் இருந்து, தடுத்து, புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.
  • நெல்லிக்காயில் விட்டமின் C அதிகம் உள்ளது. எனவே இது உடலை குளிர்ச்சியுடன் வைத்து, உடலின் அதிகப்படியான சூட்டை குறைப்பதுடன், சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை அளித்து, சரும அழகை அதிகரிக்கிறது.
  • நெல்லிக்காய் ஜூஸில் தேன் மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால், நீரிழிவு நோய் வராது.
  • கண்புரை, கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் சிவத்தல் போன்ற கண் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் வராமல் தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • இரைப்பை கோளாறுகள், வயிற்றுப்போக்கு, சீதபேதி, வயிற்றுப் புண் மற்றும் அசிடிட்டி போன்ற வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.
  • இதய தசைகளை வலிமையாக்கி, ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதய நோய்கள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற வாய் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • நெல்லிக்காய் ஜூஸில் ஜாதிக்காய் பொடி சேர்த்து கலந்து இரவில் குடித்து வந்தால், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
  • பைல்ஸ் மற்றும் நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், இந்த நெல்லிக்காய் ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
  • நெல்லிக்காய் சாற்றில், சிறிது தேன் கலந்து 2 வேளைகள் தினமும் சாப்பிட்டு வந்தால், மூச்சுக்குழாய் அழற்சி, காசநோய் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்