எலுமிச்சை பழத்தின் பக்கவிளைவுகள்

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
Cineulagam.com

எலுமிச்சை பழத்தின் ஜூஸை உடல் பருமன் கொண்டவர்கள் அதிகமாக குடிப்பார்கள். அவ்வாறு அதிகமாக தினமும் குடித்து வந்தால் பக்கவிளைவுகளை தான் அதிகம் சந்திக்கக் கூடும்.

எலுமிச்சை பழத்தின் தீமைகள்
  • அமிலத்தன்மை எலுமிச்சையில் அதிகமாக உள்ளது. எனவே இந்த ஜூஸை அதிகமாக குடிக்கும் போது, அது பற்களின் ஆரோக்கியத்தைக் குறைத்து, பல் கூச்சம் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.
  • நீரில் அளவுக்கு அதிகமாக எலுமிச்சை சாற்றினை கலந்து குடித்தால், நெஞ்செரிச்சல் ஏற்படும். நெஞ்செரிச்சல் அதிகமானால், நெஞ்சில் வலி ஏற்படும்.
  • எலுமிச்சையில் விட்டமின் C அல்லது அஸ்கார்பிக் ஆசிட் ஏராளமாக உள்ளது. இவைகள் சிறுநீரகத்தில் சிறுநீர் உற்பத்தியை அதிகரித்து, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலையை ஏற்படுத்திவிடும்.
  • நீரில் அதிக அளவு எலுமிச்சை பழத்தின் சாற்றை கலந்து குடித்தால், அது உடல் வறட்சியை ஏற்படுத்தும்.
குறிப்பு

எலுமிச்சை பழத்தின் ஜூஸ் குடிக்கும் போது ஒரு டம்ளர் தண்ணீரில் பாதி எலுமிச்சை பழத்தின் சாற்றினை மட்டும் கலந்து குடிப்பதே நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்