அன்னாசிப் பழச்சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Report Print Arbin Arbin in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

அன்னாசி பல வித நன்மைகளை தன்னுள்ளேயே கொண்டது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, உடல் வளச்சியை ஊக்குவிப்பது, வீக்கத்தை குறைப்பது, இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பது, மன நிலையை சமன் செய்வது, தசை ஆற்றலுக்கு உதவுவது , கருவுருதலை அதிகரிப்பது, செரிமானத்தை அதிகரிப்பது போன்றவை இதன் ஆரோக்கிய பலன்கள் ஆகும்.

இந்த பழச்சாறில் ப்ரோமெலைன் என்ற என்சைம் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவும் முக்கியமான என்சைம் ஆகும். மற்றும் பொட்டாசியம், பி குடும்ப வைட்டமின்கள், மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.

உயர்ந்த இரத்த அழுத்தம், குறைந்த வளர்சிதை மாற்றம், குறைந்த நோயெதிர்ப்பு சக்தி, கருவுறுதலில் பிரச்சனைகள், வீக்கங்கள், புற்றுநோய் அபாயம், மலச்சிக்கல், மனச்சோர்வு, பதட்டம் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் அன்னாசி பழச்சாறை தொடர்ந்து அருந்தலாம்.

பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், உயர் இரத்த அழுத்தத்திற்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. இது ஒரு சிறந்த குழல்விரிப்பி. அதனால் ஹைப்பர் டென்ஷன் குறைகிறது.

இதனால் இதய நலன் முற்றிலுமாக பாதுகாக்கப்படுகிறது. இதன் மூலம் மாரடைப்பு, வாதம் போன்றவற்றின் அபாயங்கள் குறைகிறது.

இந்த பழச்சாறில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. கடைகளில் கிடைக்கும் அன்னாசி பழச்சாறில் அஸ்கார்பிக் அமிலம் சேர்க்கப்படுகிறது.

இதன்மூலம் வைட்டமின் சி ஊட்டச்சத்து இன்னும் அதிகரிக்கிறது. இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊக்கப்படுத்தி வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதுவே உடலை காக்கும் அரணாக இருக்கின்றது.

வைட்டமின் பி அன்னாசி சாற்றில் அதிகமாக உள்ளது. மனநிலையை மேம்படுத்தும் ஹார்மோன் வளர்ச்சியை சீராக்குகிறது. இதனை அருந்துவதால் பதட்டம் தணிக்க படுகிறது. மனச்சோர்வுக்கு ஒரு சிறந்த தீர்வை தருகிறது.

ப்ரோமெலைன் என்ற என்சைம் அன்னாசியில் காணப்படுகிறது. இது செரிமானத்திற்கு மிகவும் உதவும் ஒரு என்சைம். இந்த என்சைம் வீக்கத்தையும் குறைக்கிறது. கீல்வாதத்தின் அறிகுறிகளை களைகிறது. இந்த என்சைம், வலி நிவாரணியாக செயல்படுகிறது மற்றும் சைனஸ் தொந்தரவுகளை தீர்க்கிறது.

அன்னாசி சாறில் அதிகமாக உள்ள வைட்டமின் சி சத்து, கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால், திசுக்கள், தசைகள், எலும்புகள், இரத்த நாளங்கள், போன்றவற்றின் உருவாக்கத்திற்கு இந்த கொலாஜென் உதவுகிறது.

நோயிலிருந்து மீண்டு வந்தவர்கள், சர்ஜெரி முடித்து வந்தவர்கள், மீண்டும் ஆரோக்கிய நிலைக்கு செல்ல இந்த பழச்சாறை பருகலாம்.

ப்ரோமெலைன் மற்றும் பீட்டா கரோடின் இரண்டுமே புற்று நோய்க்கு எதிராக செய்லபடும் தன்மை கொண்டவை.

இவை புற்று நோய் ஏற்படுத்தும் மற்றும் பரப்பும் செல்களின் உற்பத்தியை குறைகின்றன. ஒக்ஸிஜனேற்றதால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்குகிறது. இதனால் நாட்பட்ட வியாதிகள் குணமடைகின்றன.

இந்த பழத்தை அதிகமாக உட்கொள்வதால் கர்ப்ப கால சிக்கல்கள், நீரிழிவு பாதிப்புகள், எடை அதிகரிப்பு, ஒவ்வாமை, இரத்தப்போக்கு உள்ளிட்ட சில தீய விளைவுகளும் ஏற்படுகின்றன.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்