ஆரஞ்சு பழத்தின் தோலை தூக்கி போடாதீர்கள்: உடல் கொழுப்பை குறைக்குமாம்

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

ஆரஞ்சு பழத்தில் மட்டுமில்லாமல் அதன் தோலில் கூட பல்வேறு மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளது.

ஆரஞ்சுப்பழ தோலில் உள்ள மருத்துவ நன்மைகள்
 • ஆரஞ்சுப் பழத்தின் தோலை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால், அது நம் உடலில் உள்ள கொழுப்புகளைக் குறைத்து, இதயத்திற்கு செல்லும் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
 • ஆக்ஸிஜன் இல்லாத கிருமிகளை விரட்டுவதுடன், ஆரோக்கியமான செல்களிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்துக் செல்வதுடன், புற்றுநோயை வளர்க்கும் செல்களின் வளர்ச்சியை முழுமையாகத் தடுக்க பயன்படுகிறது.
 • ஆரஞ்சுப் பழத்திலுள்ள வேதிப்பொருட்கள் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபட உதவுகிறது. எனவே 20 நாட்களுக்கு ஆரஞ்சுப் பழத்தோலை பயன்படுத்தி வந்தால், நெஞ்செரிச்சலில் இருந்து நல்ல பலனை பெறலாம்.
 • ஆரஞ்சு பழத்தோல்கள் 100 கிராம் அளவிற்கு நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது. எனவே இது எரிச்சலை உண்டாக்கும் வயிறு தொடர்பான பிரச்சனைகள், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை போன்றவற்றை குணமாக்குகிறது.
 • ஆரஞ்சு பழத்தின் தோலில் உள்ள ஆக்ஸிஜன் எதிர்ப்பு பொருட்கள் மூச்சுக்குழாய் அழற்சி, சளி, ப்ளூ, ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகின்றது.
இதர நன்மைகள்
 • வீட்டில் உள்ள அறைகளை துர்நாற்றம் வீசாமல் தடுக்க ஆரஞ்சுப் பழத்தோலுடன் சந்தனம் அல்லது இலவங்கம் போன்ற சில வாசனைத் தரும் பொருட்களை சேர்த்து கலவை செய்து பயன்படுத்தலாம்.
 • மஞ்சள் கறை படிந்துள்ள பற்களை பளிச்சிட, ஆரஞ்சுப் பழத்தோலை பவுடராக அல்லது நேரடியாக ஆரஞ்சு தோலை பற்களின் மீது தேய்க்கலாம்.
 • ஆரஞ்சுப் பழத்தோலில் உள்ள எண்ணெய் பசை வீட்டில் உள்ள சில அழுக்குகள் அடைந்த பொருட்கள் மீது தேய்த்து, அதில் உள்ள அழுக்கை நீக்கி பளிச்சிட செய்யலாம்.
 • ஆரஞ்சுத் தோல்களை கொண்டு தாவரங்களுக்கு உரமாக பயன்படுத்தலாம். ஆனால் அதிகமாக பயனப்டுத்தக் கூடாது. ஏனெனில் ஆரஞ்சு தோலில் உள்ள நைட்ரஜன் சத்து அதிகமாக உள்ள மண், இலைகளை சுருங்கச் செய்துவிடும்.
 • ஆரஞ்சுப் பழத்தோலின் சாற்றை தொடர்ந்து சருமத்தில் தடவி வந்தால், சருமம் மென்மையாகவதுடன், சருமத்தில் உள்ள கருமைகள் நீங்கும்.
 • ஆரஞ்சுப்பழ தோலின் சாற்றை எறும்புகள், கொசுக்கள், ஈக்கள் மற்றும் பிற பூச்சிகளை வரும் பாதையிலும், அவைகள் இருக்கும் இடங்களிலும் தெளித்து வைத்தாலே போதும்.
குறிப்பு

ஆரஞ்சுப் பழத்தோலைப் பயன்படுத்தும் போது, பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தாத, உயிரோட்டமுள்ள சூழலில் வளர்க்கப்பட்ட ஆரஞ்சுப் பழங்களின் தோலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஏனெனில், சந்தைகளில் விற்கப்படும் ஆரஞ்சுப் பழங்கள் வேதிப்பொருட்கள் நிறைந்த செயற்கை உரங்களால் வளர்க்கப்பட்டதால், அவைகள் சருமத்தில் பல பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்