தினம் ஏதாவது ஒரு பழம்: உடல் பிட்டாக இருக்குமாம்

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

உலக அளவில் நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளின் மூலம் தினசரி பழங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பது தெரியவந்துள்ளது.

தினமும் பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதன் மூலம் இதயநோய், டைப் 2 நீரிழிவு, புற்றுநோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படாது. அதோடு உடல்பருமன் ஏற்படுவது தடுக்கப்படும் என்று உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பழங்களை எப்படியெல்லாம் சாப்பிடலாம்?
  • அன்னாசி, மாம்பழம், திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, கிவி, வாழைப்பழம் போன்ற பழங்களை அழகாக கட் செய்து, ப்ரிட்ஜில் வைத்து அவ்வப்போது எடுத்து சாப்பிடலாம்.
  • மதிய வேளையில் தினமும் பழங்களை சாலட் போலவும் செய்து சாப்பிடலாம். அதுவும் பழங்களுடன் முந்திரி, பாதாம், பிஸ்தா, போன்றவை கலந்தும் சாப்பிடலாம்.
  • காலை உணவாக ஊட்டச்சத்து மிக்க ஆப்பிள், இனிப்புக் கிழங்கு, ப்ரெட், வாழைப்பழம் மற்றும் உலர் பழங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பு

தினமும் உணவு முறையில் பழங்களை மேற்கூறப்பட்டுள்ளது போல பின்பற்றி வந்தால், உடல் எப்போதும் பிட்டாக இருக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்