மலேரியா, சளி இருமல், அம்மை நோய்களை கட்டுப்படுத்தும் வேம்பு!

Report Print Gokulan Gokulan in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக விளங்குகிறது வேம்பு.

பற்பல நோய்களுக்கு பல வியாதிகளுக்கும் அருமருந்தாக திகழ்கின்றது.

குறிப்பாக இது நோய் எதிரப்பு சக்தியை தூண்டுகின்றது. வேம்பு பல்வேறுபட்ட மருத்துவ குணங்கள் கொண்டது. அலர்ஜி, சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கும் இது அருமருந்தாக உள்ளது.

ஒரு தண்டு வேம்பு வேர்ப்பட்டையுடன், 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், வடிகட்டி, இளஞ்சூடான பதத்தில் இந்த நீரால் வாய் கொப்புளித்து வர பல்வலி தீரும்.

சாதாரணமாகக் கடையில் கிடைக்கும் வேப்ப எண்ணெய்யைத் தலையில் தேய்த்துக் கொண்டுவர, தலைமுடி உதிர்தலும், தலைப்பேன், பொடுகுத் தொல்லையும், இளநரையும் கட்டுப்படும்.

மாதவிடாய் முறையாக இல்லாத பெண்கள் ஒரு சிறு துண்டு வேம்பு பட்டையிலிருந்து தயாரித்த சூடான பானத்தைக் குணமாகும்வரை, காலை, மதியம் மற்றும் மாலையில் பருக வேண்டும்.

வேப்பங்காயை வெயிலில் உலர்த்தி அந்த பொடியை வெந்நீரில் கலந்து கொடுக்க மலேரியா காய்ச்சல் குணமாகும்.

வேப்பம்பூ துவையல், இரசம் போன்றவற்றைத் தயார் செய்து முறையாகச் சாப்பிட்டு வர, சளியிலிருந்து விடுதலை கிடைப்பதுடன் உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

சரும வியாதி உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் குளித்து வரலாம்.

சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.

வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

வேப்பிலையை காலையில் டீயுடன் சேர்த்து அருந்தினால் சாதாரண சளி இருமல் குறையும்.

கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும்.

வேப்பிலையை அரைத்து வீக்கம் உள்ள இடங்கள், மூட்டுகள் , வாத நோய்

முதுகுத் தண்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கும் சிறந்த அருமருந்தாகும்.

வேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பித்த வெடிப்பு, கட்டி, பரு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும்.

தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.

வேப்பிலை, எலுமிச்சம் பழச் சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்க்க, பித்த மயக்கம் குணமாகும். வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச பித்த வெடிப்பு, கால் பாத எரிச்சல் குணமாகும்.

வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும்.

கொஞ்சம் வேப்பம் பூவுடன் இரண்டு அல்லது மூன்று மிளகை வைத்து அரைத்து சுண்டைக்காய் அளவு குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றுக் கிருமிகள் செத்து மலத்தோடு வந்துவிடும்.

நீரிழிவு நோயாளிகள் வேம்பு இலைகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். ஏனெனில் வேம்பு ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க கசப்பு சுவை கொண்ட அட்ரினலின் மற்றும் குளுக்கோஸை தூண்டுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்