பல நோய்களுக்கு தீர்வு தரும் இலவங்கத்தின் மருத்துவ குணங்கள்!

Report Print Gokulan Gokulan in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasri.com

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் -சி மற்றும் ஏ+ போன்றவை உள்ளன.

வயிற்றில் ஏற்படும் கோளாறுகளைப் போக்க கூடியது, பசியின்மையைப் போக்கி பசியைத் தூண்டக் கூடியது, வயிற்றில் அமிலச் சுரப்பால் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க கூடியது.

குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றை குணமாக்க வல்லது.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

தினசரி ஒன்று அல்லது இரண்டு கிராம்பு வீதம் சாப்பிட்டு வந்தால் அதிகப்படியான பித்தத்தை கட்டுப்படுத்துகின்றது.

சொத்தைப்பல் மற்றும் பல் சம்பந்தமான அனைத்து நோய்களை தீர்க்க கிராம்பு பயன்படுகின்றது.

வயிற்றுக் கடுப்பைப் போக்கக் கூடியது, நுண் கிருமிகளை அழிக்கக் கூடியது. வாய் மற்றும் தொண்டைப் பகுதியின் மென்சதைப் பகுதியில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதற்கும் இலவங்கம் பயன்படுகிறது.

கண் இமைகளில் ஏற்படக்கூடிய அலர்ஜியை போக்க உதவுகின்றது.

நவீன மருத்துவத்தில் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக பல ரசாயனக் கலவையால் ஆன மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ரத்தத்தில் உள்ள “ஹீமோகுளோபின்” என்னும் இரும்புச் சத்துக்குறைப்பாட்டை ஏற்படுத்தி இரத்த சோகையை உண்டாக்கக் கூடியவையாக உள்ளன.

இலவங்கத்தின் அடங்கியுள்ள “யூஜினால்” என்னும் வேதிப்பொருள் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்க உதவும்.

கிராம்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அதைப் பருகச் செய்வதால் செரிமானமின்மை, வயிற்று உப்புசம் ஆகியவை குறைவதாக உள்ளது.

இலவங்கத்தை உணவாகப் பயன்படுத்தும் போது தோல் புற்று நோய் உண்டாவது தடுக்கப்படுகிறது.

மேலும் நுரையீரல் புற்று நோயை தடுத்து நிறுத்தவல்ல மருந்தாகவும் செயல்படுகிறது. இதயமும் இதய நாளங்களும் ஆரோக்கியமாகச் செயல்பட உதவுகிறது.

இலவங்கம் மூளையைப் பாதிக்கக் கூடியவையான பரபரப்பு, ஞாபக மறதி, மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்கக் கூடியது. மூளைக்கு சுறுசுறுப்பைத் தரவல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்