ஆரோக்கியத்திற்கு தேவையான 10 உணவுகள்

Report Print Fathima Fathima in ஆரோக்கியம்
692Shares
692Shares
lankasrimarket.com

மனிதன் வாழ அடிப்படை தேவைகளில் ஒன்று உணவு. ஆரோக்கியத்துடனும் நோய் நோடியின்றி வாழ்வதற்கு நாம் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுதல் அவசியமாகும்.

ஆனால் இன்றைய காலத்தில் நாகரிகம் என்ற பெயரில் சுவையுள்ள உணவுகளை மட்டுமே நாம் விரும்பி உண்கிறோம்.

இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கமாலே போய்விடுகின்றது.

இதை தவிர்க்க, குறிப்பிட்ட சில உணவுகளை, குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது அவசியம் சாப்பிடுதல் அவசியமாகும். இதன் மூலமாக உடலுக்கு தேவையான சத்துகளை பெற முடியும்.

பால் பொருட்களில் கால்சியம் அடங்கியுள்ளதால் எலும்பு மற்றும் பற்கள் வலிமை பெறுகின்றது. பால் பொருட்களில் கால்சியம் நிறைந்த கொழுப்பு நீக்கப்பட்ட யோகட் ஒரு கப் இது கால்சியம் வைட்டமின் டி நிறைவாக உள்ள சிறந்த உணவுவாகும்.

இதை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு அத்தியாவசியமான பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், ரிபோஃப்ளாவின், வைட்டமின் பி12 மற்றும் புரத சத்தும் இதில் அடங்கியுள்ளது. யோகார்ட் சாப்பிடுவதன் மூலமாக 100 கலோரி கிடைக்கும்.

புரத சத்துள்ள உணவுகளில் முட்டை சிறந்தவொரு உணவாகும். புரத சத்துதான் ஆரோக்கியத்துக்கும், உடல் வளர்ச்சிக்கும் அடிப்படையான ஒன்றாகும்.

முட்டையினை அடிக்கடி உணவில் அவித்தோ, பொரியல், ஆம்லெட் என எந்த வகையிலாவது சாப்பிடுவது நல்லது. தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நாள் முழுவதும் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ளும்.

ஆளி விதைகளில் ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் உள்ளதால் இதில், பாலிஅன்சாச்சுரேட்டடு கொழுப்பு அடங்கியுள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாகயுள்ளதால், நாம் சாப்பிடும் உணவு அல்லது நொறுக்கு தீனிகளில் இதை உடன் சேர்த்துக்கொண்டால் எளிதில் செரிமானமாகும்.

கீரை வகைகளில் குறைந்த அளவு விட்டமின்-ஏ உள்ளது மற்றும் அதிகளவில் விட்டமின்-சி மற்றும் கே உள்ளது. உடலுக்கு தேவையான தாதுசத்துகளான இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், விட்டமின்-இ ஆகியவையும் அடங்கியுள்ளது, நாம் தினமும் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பீன்ஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் புரோட்டீன் நார்ச்சத்து, பி காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட், விட்டமின்கள் அடங்கியுள்ளது.

இதில் இரும்புசத்து, மாங்கனீஸ், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம், தாமிரம் போன்ற தாது சத்துகளும் நிறைவாக உணவாகும். இது, உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை‌ தடுத்து, ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

தேடம்பழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது., இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும்.

தினசரி ஒரு தேடம்பழத்தினைப் பழமாகவோ அல்லது ஜூஸாகவோ சாப்பிடுவது நல்லது, நமது உடலுக்கு ஆரோக்கியத்தினை தரும்.

சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள விட்டமின் ஏ சத்தில் இருந்து கிடைக்கக்கூடிய ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டீன், கண், எலும்பு ஆரோக்கியத்துக்கு நல்லது, வேகவைத்து இந்த கிழங்கை அப்படியே சாப்பிடுவது நல்லது.

பூசணிக்காய் விதையிலும் ஏராளமான சத்து நிறைந்துள்ளது. நார்ச்சத்து, விட்டமின், தாதுப்பொருள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளதால், பூசணிக்காய் விதையை காயவைத்து, பொடியாகவோ அல்லது அப்படியோ நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்