உலக சுற்றுலா சென்ற இளம் ஜேர்மன் தம்பதிக்கு நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியை சேர்ந்த இளம் தம்பதி நியூசிலாந்தில் சுற்றுலாவில் இருந்த போது நடந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஜேர்மனியின் Bad Sachsa நகரை சேர்ந்தவர் மார்க் டேம்போல்ட் (30), இவர் மனைவி மார்லினா பிச்சிட் (24).

இளம் தம்பதிகளான இவர்கள் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் உலக சுற்றுலாவை தொடங்கிய நிலையில் பல்வேறு நாடுகளை சுற்றி பார்த்து வந்தனர்.

சமீபத்தில் நியூசிலாந்தில் உள்ள நார்த்லாண்டில் மார்க்கும், மார்லினாவும் சுற்றுலா சென்றனர்.

அப்போது காரில் இருவரும் சென்று கொண்டிருந்த போது எதிரில் வேகமாக வந்த டிரக் லொறி அவர்கள் கார் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

டிரக் லொறி ஓட்டுனருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து பொலிசார் அதிகாரி வெயின் ஈவர்ஸ் கூறுகையில், சாலையின் தவறான பாதையில் உயிரிழந்த தம்பதிகள் காரை ஓட்டி வந்ததால் தான் விபத்து ஏற்பட்டது, இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளார்.

Credit: Supplied

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்