ஜேர்மனியில் பெண்ணை கொலை செய்த அகதிக்கு ஆயுள் தண்டனை

Report Print Athavan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் உள்ள Traunstein நீதிமன்றம் பெண் ஒருவரை கொலை செய்த வழக்கில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த அகதிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இஸ்லாம் மதத்தை துறந்து கிருஸ்துவத்திற்கு மாறியதால் Prienல் உள்ள ஒரு பல் பொருள் அங்காடியில் அந்த பெண்ணை கத்தியால் குத்தி அந்த நபர் கொலை செய்துள்ளார்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அந்த பெண்ணின் இரு குழந்தைகளின் கண் முன்னே இந்த சம்பவம் நடந்துள்ளது .

16 முறை கத்தியால் அந்த நபர் பெண்ணின் உடலில் குத்தியாதாக பொலிஸார் தெரிவித்தனர், 30 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் பெயர் குறித்த விபரம் ஏதும் வெளியிடப்படவில்லை.

38 வயதான அந்த பெண் இஸ்லாம் மார்கத்தை இழிவு படுத்தியதாக நினைத்த அந்த நபர் மேலும் தன்னையும் இஸ்லாம் மார்கத்தை துறந்துவிடுமாறு அந்த பெண் கோரிக்கை வைத்தால் ஆத்திரமடைந்து கொலை செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் இருந்த போதே கிருஸ்துவ மதத்திற்கு அந்த பெண் மாறிவிட்டதாகவும் 2011 ஆண்டு முதல் ஜேர்மனியில் வசித்து வருவதாகவும் தெரிகிறது.

இது மத ரீதியிலான ஒரு தாக்குதல் என குறிப்பிட்ட நீதிமன்றம் அந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

அவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் கொலை செய்த பெண்ணின் உறவினர்களிடம் நீதிமன்ற வளாகத்தில் மன்னிப்பு கோரினார்.

ஏற்கனவே மனநலம் குறைபாடு காரணமாக அந்த நபர் 3 மாதம் வரை சிகிச்சை பெற்று வந்தவர் என்பது கூடுதல் தகவல்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்