வெளிநாட்டு உளவாளியாக விருப்பம் தெரிவித்த ஜேர்மானியர்: பொலிஸ் தீவிர விசாரணை

Report Print Harishan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

வெளிநாட்டு உளவாளியாக பணிபுரிய விருப்பம் தெரிவித்திருந்த ஜேர்மானிய இளைஞரிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேனி கண்டர் என்னும் 27 வயது இளைஞர் ஒருவர், Leipzig பகுதியில் வசித்து வந்துள்ளார்.

உலகின் மூன்று உளவுத்துறை அமைப்புகளுக்கு அந்நபர் அனுப்பியுள்ள விண்ணப்ப கடிதத்தில், “நான் அனைத்து கட்ட பயிற்சிகளையும் முடித்துவிட்டேன். பணி வழங்கினால் சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் என்னிடம் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயலை கண்டு அதிர்ச்சியடைந்த ஜேர்மன் பொலிசார், குறித்த நபரை கைது செய்து தீவிர விசாரணைக்கு பின் விடுவித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், அந்நபர் வெளிநாட்டு உளவு பிரிவில் பணியாற்ற ஆர்வம் தெரிவித்தது சட்டப்படி குற்றம். விடுவிக்கப்பட்டிருந்தாலும் அவர் குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வெளிநாட்டு உளவு பிரிவில் பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் நபர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க ஜேர்மனி சட்டத்தில் இடமிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்