ஜேர்மனியில் அதிகரிக்கும் Reichsbürger அங்கத்தினரின் எண்ணிக்கை: பாதுகாப்பு நிபுணர்கள் அச்சம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
224Shares
224Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் கடந்த ஓராண்டில் மட்டும் Reichsbürger உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் தற்கால சட்டத்திட்டங்களை ஒப்புக்கொள்ளாத Reichsbürger அங்கத்தினர்களின் எண்ணிக்கையானது 15,600 என அதிகரித்துள்ளது.

2017-ல் மட்டும் குறித்த உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 10,000-ஐ தொடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பவேரியா மாகாணத்தில் மட்டும் குறித்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கு மட்டும் 3,500 உறுப்பினர்கள் உள்ளனர். Baden-Württemberg மாகாணத்தில் 2,500 பேர் உள்ளனர். Lower Saxony பகுதியில் 1,400 பேரும் Saxony பகுதியில்

1,300 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. இவர்கள் பொதுவாக ஜேர்மனியை அமெரிக்க காலனி என்றே குறிப்பிட்டு வருகின்றனர்.

தற்கால சட்டத்திட்டங்களை ஒப்புக்கொள்ளாத இவர்கள் ஜேர்மன் பேரரசு என்றே நம்பிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த குழுவினர் தங்களுக்கென்று தனியாக ஒரு கருத்தியலை உருவாக்கி வைத்துள்ளனர்.

மட்டுமின்றி தற்போது தங்களுக்கென தனியாக ஒரு ராணுவத்தை உருவாக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்பொருட்டு நாட்டின் பல்வேறு மாகாணங்களில் குடியிருக்கும் இவர்கள் ரகசிய ஆலோசனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஆயிரத்துக்கும் அதிகமான Reichsbürger உருப்பினர்கள் தங்கள் பாதுகாப்புக்காக ஆயுதங்கள் கருதவும் அரசிடம் இருந்து ஆணை பெற்றுள்ளனர்.

இருப்பினும் இவர்களிடம் குவிந்திருக்கும் சட்டவிரோத ஆயுதங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என பாதுகாப்பு நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் வலதுசாரி அடிப்படைவாதிகள் எனவும் கூறப்படுகிறது.

மேலும், சமீப காலங்களாக மிக கொடூரமான முறையில் தாக்குதல்களும், கலவரங்களும் ஜேர்மனியின் பாதுகாப்பு அதிகாரிகளை கவலை கொள்ள செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் நாடு முழுவதும் உள்ள Reichsbürger உறுப்பினர்களை பாதுகாப்பு நிபுணர்கள் ரகசியமாக கண்காணித்தும் வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்