2 வயது குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Report Print Arbin Arbin in ஜேர்மனி
523Shares
523Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் நபர் ஒருவர் தனது 2 வயது குழந்தையை தாயாரின் கண்முன்னே கழுத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை அடுத்து மாயமான குறித்த நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

hamburg மாகாணத்தின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து நேற்றைய தினம் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ பகுதிக்கு விரைந்த பொலிசார் குழந்தையின் நிலை கண்டு கடும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

குழந்தை கொல்லப்பட்டு கிடந்த அறையின் ஒரு பகுதியில் இருந்து அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் குழந்தையின் தாயாரை பொலிசார் மீட்டுள்ளனர். தற்போது மாநக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் ஆபத்து கட்டத்தை தாண்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த தம்பதியரின் மற்றொரு குழந்தை எவ்வித ஆபத்தும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. சம்பவ பகுதியில் மோப்ப நாய் மற்றும் விசாரணை அதிகாரிகள் கடும் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்த பின்னர் hamburg ரயில் நிலையத்தில் இருந்து தப்பியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி குழந்தை மிக கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளதும், உடலில் பல இடங்களிலும் வெட்டு காயங்கள் உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்து 12 மணி நேரத்திற்கு மேலாகியும் இதுவரை பொலிசாரால் குறித்த குற்றவாளியை கைது செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

மட்டுமின்றி குழந்தையின் கொலைக்கு என்ன காரணம் என கண்டுபிடிக்க முடியாமலும் பொலிசார் திணறி வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பமானது பாகிஸ்தானில் இருந்து ஜேர்மனியில் குடியேறியவர்கள் எனக் கூறப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்