பிரித்தானியாவே அதிகம் பாதிக்கப்படும்: ஜேர்மன்

Report Print Thayalan Thayalan in ஜேர்மனி
பிரித்தானியாவே அதிகம் பாதிக்கப்படும்: ஜேர்மன்
305Shares
305Shares
lankasrimarket.com

பிரெக்சிற்றினால் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட பிரித்தானியாவே அதிகம் பாதிக்கப்படும் என ஜேர்மன் பொருளாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேம்படுத்தப்பட்ட ஜேர்மன் அரசாங்கத்தின் வளர்ச்சி குறித்து விளக்கமளிக்கும் வகையில் பெர்லினில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், பிரெக்சிற் காரணமாக ஜேர்மன் பல வர்த்தக சிக்கல்களை எதிர்கொள்ளும். ஆனால், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளைவிட பிரித்தானியாவே பிரெக்சிற்றினால் அதிகம் பாதிக்கப்படும்.

நாமும் நிச்சயம் வர்த்தக ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வோம் என எதிர்பார்க்கிறேன். ஆனால், அது பிரித்தானியாவைவிட, ஐரோப்பாவிற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்றார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்