பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 4 வயது சிறுமி மீட்பு: நடந்தது என்ன?

Report Print Arbin Arbin in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com

ஜேர்மனியில் மர்ம நபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இரையாகும் 4 வயது சிறுமியை மீட்க பொதுமக்களின் இதவியை நாடிய பொலிசாருக்கு பலன் கிட்டியுள்ளது.

குறித்த விவகாரத்தில் சிறுமியின் தாயார் மற்றும் உறவினர்களின் உதவியால் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நேற்றைய தினம் ஜேர்மனி முழுமையும் பொலிசார் பாதிக்கப்பட்ட குழந்தையின் புகைப்படத்தை பொதுவெளியில் பிரசுரித்து பொதுமக்களின் உதவியை நாடினர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி குறித்த 4 வயது சிறுமி கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இரையாகி வருவதாகவும், குறிப்பிட்ட ஆபாச வலைதளத்தில் சிறுமியின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளதாகவும் பொலிசார் தகவல் வெளியிட்டனர்.

இதனையடுத்து உள்ளூர் நேரப்படி நள்ளிரவில் சிறுமியையும், அந்த நபரையும் பொலிசார் பிடிகூடி கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த உள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

கைதான நபர் ஜேர்மன் குடிமகன் எனவும் Lower Saxony பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது சிறுமிக்கு உளவியல் ரீதியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மிக விரைவில் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்படுவார் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்