பணத்தை விட ஜேர்மன் மக்கள் இதை தான் விரும்புகிறார்களாம்: சர்வே முடிவுகள்

Report Print Raju Raju in ஜேர்மனி
0Shares
0Shares
Promotion

ஜேர்மனியின் நுகர்வோர்கள் நேரடி பணம் செலுத்துவதை விட மின்னணு முறைகளில் கட்டணங்களை செலுத்தவே அதிகம் விரும்புவது சர்வே முடிவில் தெரியவந்துள்ளது

உலகளவில் உள்ள மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான Kantar TNS நிறுவனம் ஜேர்மனி நுகர்வோர்கள் எந்த முறையில் பணம் செலுத்த விரும்புகிறார்கள் என்ற ஆய்வை கடந்த ஆகஸ்ட் மாதம் ஓன்லைனில் நடத்தியது.

அதன் முடிவில், 50 யூரோவுக்கு அதிகமாக பணம் செலுத்தும் நுகர்வோர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் மின்னணு பணம் செலுத்தும் (E-Cash) முறை மற்றும் கிரெடிட் கார்டில் பணம் செலுத்தவே விரும்புவது தெரியவந்துள்ளது.

25 யூரோ வரை பணம் செலுத்தும் நுகர்வோர்களில் பாதி பேரும் இதே கருத்தை கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் குறைவான அளவில் பொருட்கள் வாங்கும் நுகர்வோர்களில் பெரும்பாலானோர் நேரடி பணமாக செலுத்த விரும்புகின்றனர்.

மொத்தத்தில் வெறும் 30 சதவிகிதம் பேர் மட்டுமே பணமில்லாத (noncash) கட்டண முறைகளை பயன்படுத்த மறுப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

செலவினங்களைக் கட்டுப்படுத்த இயலாமை, பாதுகாப்பு கவலைகள் போன்ற காரணங்களால் தான் மற்ற கட்டண முறையை விட நேரடி பணம் செலுத்தும் முறையை நாடுவதாக பலர் தெரிவித்துள்ளனர்.

பெரிய பரிவர்த்தனைகளுக்கு மிகுந்த பாதுகாப்பு, சௌகரியம், வேகம் போன்ற காரணங்களுக்காக கிரெடிட் கார்டு மற்றும் மின்னணு முறையை பணம் செலுத்த நாடுவதாகவும் பலர் கூறியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்