புயலால் தத்தளித்த ஜேர்மன் குடிமக்களுக்கு ஓர் நற்செய்தி

Report Print Peterson Peterson in ஜேர்மனி
284Shares
284Shares
lankasrimarket.com

ஜேர்மனி நாட்டில் எதிர்வரும் வாரங்களில் கடுமையான குளிரை போக்கும் விதத்தில் வெயில் காலம் தொடங்க உள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் அறிவித்துள்ளது.

அக்டோபர் மாதம் தொடங்கியது முதல் சேவியர் என்ற புயல் வீசியதை தொடர்ந்து பல பகுதிகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகின.

மரங்கள் பெயர்ந்து விழுந்ததுடன் பொதுமக்கள் கடும் குளிரை தாங்க முடியாமல் தவித்து வந்துள்ளனர்.

இந்நிலை நீங்கும் வகையில் 14 மற்றும் 15 ஆகிய திகதிகள் முதல் வெயில் தாக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜேர்மனி முழுவதும் வானிலை மிதமான வெப்பத்துடன் காணப்படும்.

குறிப்பாக, தெற்கு ஜேர்மனியில் 24 டிகிரி செல்சியசும், மேற்கு ஜேர்மனியில் 14 முதல் 19 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் வீசும்.

வெள்ளிக்கிழமை வரை ஏற்படும் இந்த வானிலை மாற்றத்தை ஆய்வாளர்கள் ‘கோல்டன் அக்டோபர்’ என அழைக்கின்றனர்.

அதே சமயம், இந்த வார இறுதி வரை ஜேர்மனி முழுவதும் மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை எனவும் வானிலை மைய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்