அகதிகளின் வருகையை கட்டுப்படுத்த ஜேர்மன் சான்சலர் முடிவு

Report Print Peterson Peterson in ஜேர்மனி
194Shares
194Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் புகலிடம் கோரி வரும் அகதிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்ட வரையில் கட்டுப்படுத்த அந்நாட்டு சான்சலரான ஏஞ்சலா மெர்க்க முடிவு செய்துள்ளார்.

ஜேர்மனியில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட்ட ஏஞ்சலா மெர்க்கல் குறைவான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.

பவேரியா மாகாணத்தை சேர்ந்த CSU கட்சியுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்கும் பேச்சுவார்த்தை தற்போது நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று இருக்கட்சிகளும் ஒரு முக்கிய ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளன.

ஜேர்மனியில் அகதிகளுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் அகதிகளுக்கு மட்டுமே புகலிடம் அளிக்க ஏஞ்சலா மெர்க்கல் முடிவு செய்துள்ளார்.

இதனை இனிவரும் நாட்களில் செயல்படுத்த உள்ளதாகவும் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜேர்மனியில் புகலிடம் பெறுவதற்கு அகதிகளுக்காக தன் நாட்டின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என வாக்குறுதி அளித்தார்.

இதனை தொடர்ந்து 2016-ம் ஆண்டில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் புகலிடம் கோரி ஜேர்மனிக்கு சென்றுள்ளனர்.

கட்டுப்படுத்த முடியாத இந்த எண்ணிக்கை காரணமாக ஜேர்மனியின் பட்ஜெட் பாதிக்கப்படும் என ஏஞ்சலா மெர்க்கல் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தற்போது மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள ஏஞ்சலா மெர்க்கல் கூட்டணி கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அகதிகளின் வருகையை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்