1,400 விமான நிலைய ஊழியர்கள் பணி நீக்கம்: காரணம் இது தான்

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com

ஜேர்மனி நாட்டில் ஏர் பெர்லின் விமான நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் 1,400 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜேர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் பெர்லினில் 8,600 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் விமான நிறுவன பங்குகளில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியை தொடர்ந்து நிறுவனத்திற்கு பெரும் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து விமான நிறுவனத்தில் பணிபுரியும் பல்வேறு துறைகளை சார்ந்த 1,400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

இவர்களில் சில ஊழியர்கள் ஒப்பந்த காலமும் முடிவடைகிறது.

1,400 ஊழியர்களில் சிலர் இம்மாத இறுதியிலும், எஞ்சியவர்கள் அடுத்தாண்டு பெப்ரவரி இறுதியிலும் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள்.

எனினும், ஜேர்மனியை சேர்ந்த லூப்தான்சா விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், யூரோவிங்க்ஸ் விமான நிறுவனத்தை விரிவாக்கும் அடிப்படையில் கூடுதலாக ஊழியர்களை பணியில் அமர்த்த உள்ளதாகவும், ஏர் பெர்லினில் இருந்து வெளியேற்றப்படும் ஊழியர்கள் யூரோவிங்க்ஸில் பணியில் அமர்த்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்