காற்றில் தள்ளாடிய விமானம்: நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனி நாட்டில் உள்ள விமான நிலையம் ஒன்றில் பயணிகள் விமானம் காற்றில் தள்ளாடியவாறு தரையிறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A380 என்ற விமானம் நேற்று துபாய் நாட்டில் இருந்து ஜேர்மனிக்கு பயணமாகியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள Dusseldorf விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது கடுமையாக காற்று வீசியுள்ளது.

ஓடுதளத்தை நோக்கி இறங்கிக்கொண்டு இருந்த விமானம் காற்றில் தள்ளாடி தரையிறங்க திணறியுள்ளது.

சில வினாடிகளுக்கு பின்னர் தரையிறங்கியதும் பின் சக்கரங்கள் மட்டும் ஓடுதளத்தில் இறங்கி வலது இடதாக தாறுமாறாக சுழன்று பின்னர் முன் சக்கரம் தரையில் இறங்கியுள்ளது.

விமானிகளின் சாமர்த்தியத்தால் விமானம் பத்திரமாக தரையிறங்கி பயணிகள் அனைவரும் அதிர்ஷவசமாக பெரும் விபத்தில் இருந்து தப்பியுள்ளனர்.

மேற்கு ஜேர்மனியில் நேற்று சுமார் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசியதில் நிகழ்ந்த பல்வேறு விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்