ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிக்க அரசு ஊழியர்களுக்கு கட்டணம் இல்லை

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

ஜேர்மனி நாட்டில் ரயில், பேருந்து மற்றும் ட்ராம் வாகனங்களில் பயணிக்க அரசு ஊழியர்களுக்கு கட்டணம் இல்லை என அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

ஜேர்மனியில் உள்ள ஹெசி மாகாண அரசு தான் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

advertisement

அரசாங்கத்திற்கு சொந்தமான ரயில்கள், பேருந்துகள் மற்றும் ட்ராம் வாகனங்களில் மாகாணம் முழுவதும் பயணிக்க அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது.

ஒவ்வொரு அரசு ஊழியர்களுக்கும் Jobticket என்ற டிக்கெட் ஒன்று வழங்கப்படும். இந்த டிக்கெட்டை பயன்படுத்தி அரசு ஊழியர்கள் அனைவரும் இலவசமாக பயணிக்கலாம்.

அரசு அறிவித்துள்ள இந்த சலுகை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வருகிறது.

இதுக் குறித்து மாகாண உள்துறை அமைச்சரான Peter Beuth பேசிய போது, ‘இந்த அறிவிப்பு மூலம் அரசாங்கத்திற்கு கூடுதலாக 51 மில்லியன் யூரோ செலவாகும்.

எனினும், அரசு ஊழியர்கள் அனைவரும் அரசாங்க பேருந்துகளில் இலவசமாக பயணிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுப்படுவதை தடுக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.

ஆனால், அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை வரி செலுத்துபவர்கள் சங்கம் கடுமையாக எதிர்த்து வருகிறது.

‘ஒரு அரசு பள்ளி மாணவன் கட்டணம் செலுத்தி பேருந்தில் பயணிக்கிறான். ஆனால், அதே அரசு பள்ளி ஆசிரியர் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணிக்கிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமான அறிவிப்பு’ என அச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்