ஹிட்லர் பயன்படுத்திய உலக உருண்டை ஏலம்

Report Print Fathima Fathima in ஜேர்மனி
254Shares
254Shares
Seylon Bank Promotion

ஜேர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் பயன்படுத்திய உலக உருண்டை 65 ஆயிரம் டொலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனி வீழ்ந்த போது பெர்ச்டெஸ்காடன் நகரில் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் ஹிட்லர் தங்கியிருந்தார்.

இவரது மாளிகையை நேசப்படைகள் குண்டு வீசித் தகர்த்தன, இதன்பின்னர் மாளிகையை பார்வையிட்ட அமெரிக்க வீரரான ஜான் பார்ஸாமியன், ஹிட்லர் பயன்படுத்திய உலக உருண்டையை தனது குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்தார்.

இந்த உலக உருண்டை அமெரிக்காவின் லைவ் ஆக்ஷனியர்ஸ் என்ற நிறுவனத்தால் ஏலத்திற்கு விடப்பட்டது.

சுமார் 65000 டொலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட நிலையில், ஹிட்லரின் மேற்சட்டையும் 10,000 டொலருக்கு ஏலம் போயுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்