சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது அவசியம்! ஸ்பெயின் விவகாரம் தொடர்பாக ஜேர்மன் கருத்து

Report Print Fathima Fathima in ஜேர்மனி
182Shares
182Shares
lankasrimarket.com

ஸ்பெயினில் சட்டம் ஒழுங்கு கடைப்பிடிக்கப்படுவது அவசியம் என ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலின் பேச்சாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினிடமிருந்து பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பில் கேட்டலோனியா மாகாண மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வாக்கெடுப்பின் போது பொலிசார் வாக்கு சீட்டுகள், வாக்கு பெட்டிகளை பறித்து சென்றனர்.

வாக்களிக்க வந்த மக்களையும் துன்புறுத்தினர், இதனால் பொலிசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

எனினும் நடந்து முடிந்து வாக்கெடுப்பில் 90 சதவிகித மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இது சட்டவிரோதமானது என ஸ்பெயினின் பிரதமரும், ஸ்பெயின் மன்னரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலின் பேச்சாளர் கூறுகையில், ஸ்பெயினின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு சட்டம் ஒழுங்கை கடைபிடிப்பது அவசியம்.

ஸ்பெயினுக்கும் கேட்டலோனியாவுக்கும் இடையில் நிலவும் முரண்பாடானது உள்விவகாரமாகும்.

ஸ்பெயினில் எந்தவொரு விவகாரம் முன்னெடுக்கப்பட்டாலும் அது நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக ஒழுங்குக்கு உட்பட்டே அமைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் வாக்கெடுப்பின் போது பொலிசார் மக்களிடம் நடந்து கொண்ட விதத்துக்கு தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்