310,000 யூரோ மதிப்பிலான காரை கடித்த கழுதை: நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

Report Print Arbin Arbin in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com

ஜேர்மனியில் கேரட் வண்ணத்தில் இருந்த விலை உயர்ந்த காரை கழுதை ஒன்று கடித்து சேதமாக்கியதால் அதன் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜேர்மனியின் Hesse மாகாணத்தில் குறித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. சுமார் 310,000 யூரோ மதிப்பிலான கேரட் வண்ண McLaren 650S Spider வகை கார் ஒன்றை அதன் உரிமையாளரான Markus Zahn கழுதை கொட்டகை ஒன்றின் அருகே நிறுத்தி வைத்திருந்துள்ளார்.

இந்த நிலையில் அடங்காத பசி கொண்ட கழுதை ஒன்று குறித்த காரை கேரட் எனக் கருதி கடுத்துள்ளது. இதனால் அந்த கார் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த காரின் உரிமையாளர் Markus Zahn கழுதையின் உரிமையாளர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்ததை அடுத்து சேதமடைந்த காரின் உரிமையாளருக்கு 5,800 யூரோ இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து கழுதையின் உரிமையாளர் மேல்மூறையீடு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்