குழந்தைகள் உணவில் விஷம் கலந்த நபர்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Report Print Arbin Arbin in ஜேர்மனி
567Shares
567Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் பல்பொருள் அங்காடிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் உணவில் விஷம் கலந்த மர்ம நபரை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தென் ஜேர்மனியின் Friedrichshafen நகரில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள 5 போத்தல் குழந்தைகள் உணவில் உயிரை பறிக்கும் அளவுக்கு நச்சு கலக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை கடந்த வியாழக்கிழமை அன்று பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ள நிலையில், தற்போது அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி பல மில்லியன் யூரோ தர மறுத்தால் நகரின் பல்வேறு அங்காடிகளில் உள்ள குழந்தைகள் உணவில் நச்சு கலக்கப்படும் எனவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் Friedrichshafen நகரில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிகளில் இருந்து மட்டும் நச்சு கலந்த குழந்தைகள் உணவை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டுமின்றி குறித்த நபர் தொடர்பில் சிசிடிவி கமெரா பதிவை வெளியிட்டுள்ள பொலிசார், பொதுமக்களிடம் இருந்தும் தொடர்புடைய நபர் குறித்த தகவல்கள் கோரியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்