மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய மெர்க்கல்: முதன் முறையாக நாடாளுமன்றத்தில் நுழையும் ஏஃப்டி கட்சி

Report Print Arbin Arbin in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com

ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் நான்காவது முறையாக ஆட்சியைப் பிடிப்பார் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஏஞ்சலா மெர்க்கலின் கன்சர்வேட்டிவ் கூட்டணியான சிடியூ/சிஎஸ்யூ 33% வாக்குகளைப் பெற்று, ஜேர்மனி நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைக் கொண்ட கட்சியாக தொடந்து நீடிக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அவரது முன்னாள் கூட்டணிக் கட்சியான எஸ்பிடி 20.8% வாக்குகளைப் பெற்று, பிரதான எதிர்க்கட்சியாக அமரப் போகிறது.

இந்நிலையில், வலதுசாரி தேசியவாத கட்சியும், இஸ்லாமிய விரோத போக்குகொண்ட கட்சியுமான ஏஃப்டி 13.3% வாக்குகளை பெற்று, ஜேர்மனியின் மூன்றாவது வலுவான கட்சியாக உருவெடுத்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்தக் கட்சியானது சுமார் 88-89 இடங்களில் வெல்லும் வாய்ப்பு இருப்பதாக கணிப்புகள் கூறுகின்றன. மட்டுமின்றி இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மக்களால் புறக்கணிக்கப்பட்டு வந்த வலதுசாரி தேசியவாத கட்சியுமான ஏஃப்டி மூன்றாவது பெரிய கட்சியாகவும் அது உருவாகியுள்ளது.

இதனிடையே ஆதரவாளர்களிடம் பேசிய மெர்க்கல், சிறந்த முடிவை தாம் எதிர்பார்த்ததாகக் கூறினார், மட்டுமின்றி ஏஃப்டி கட்சிக்கு வாக்களித்தவர்களின் கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்தும் தான் கேட்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் வெளியான முடிவுகளை விட ஏஎஃப்டி கட்சி தற்போது சிறந்த முடிவுகளைப் பெற்றுள்ளது. இதன்மூலம் வலதுசாரி கட்சியான ஏஎஃப்டி கட்சி முதல் முறையாக ஜேர்மனி நாடாளுமன்றத்திற்குள் நுழைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்