ஜேர்மனியில் நாளை நாடாளுமன்ற தேர்தல்: சூடு பறக்கும் பிரச்சாரங்கள்

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com

ஜேர்மனியில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முன்னணி கட்சிகளின் பிரச்சாரங்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜேர்மனியில் நாளை நாடு முழுவதும் 19-வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் CDU/CSU கட்சியை சேர்ந்த தற்போதையை சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல், SPD கட்சியை சேர்ந்த Martin Schulz என்பவரும், இடதுசாரி கட்சியை சார்ந்த Sahra Wagenknecht ஆகிய மூவரும் சான்சலர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

நாடாளுமன்றத்தில் உள்ள 598 உறுப்பினர்களில் வெற்றி பெறுவதற்கு 300-க்கும் அதிகமான பெரும்பான்மை தேவைப்படுகின்றன.

பொதுமக்கள் நாளை வாக்களிக்க உள்ள நிலையில், ஜேர்மனியில் உள்ள முக்கிய இடங்களில் பிரச்சார கட்-அவுட்கள் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளன.

தற்போதைய சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலுக்கு ஹிட்லரின் மீசையை வரைந்து விளம்பரப்படுத்தியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஓரிடத்தில் ‘எங்களுக்கு பிகினி(உள்ளாடை) மட்டுமே போதும். புர்கா தேவையில்லை’ என்பதை வலியுறுத்தி அரைநிர்வாண பலகைகளும் வைக்கப்பட்டது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தேர்தலுக்கு பின்னர் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்து 30 நாட்களுக்குள் புதிய சான்சலரை தெரிவு செய்வார்கள்.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட சான்சலர் உடனடியாக புதிய அரசாங்கத்தை அமைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்