காலி போத்தல்களை சேகரித்த பெண்மணி: கடும் அபராதம் விதித்த நீதிமன்றம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
376Shares
376Shares
lankasrimarket.com

ஜேர்மனியின் முனிச் ரயில் நிலையத்தில் காலி போத்தல்களை சேகரித்த 76 வயது மூதாட்டிக்கு 2000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் முனிச ரயில் நிலையத்தில் காலி போத்தல்களை சேகரித்து தமது அன்றாட தேவைகளுக்கான தொகையை பெற்று வந்துள்ளார் அன்னா லீப் என்ற 76 வயது மூதாட்டி. காலியான பீர் போத்தல்களை சேகரித்து உரிய பகுதிகளில் சேர்ப்பித்தால் அதற்கு பதிலாக சிறு தொகை ஒன்றை வழங்குவது ஜேர்மனியில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் வழக்கம்.

இந்த நிலையில் தமது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் குறுக்கு வழி ஒன்றின் வழியாக முனிச் ரயில் நிலையத்தின் முக்கிய வாசலுக்கு சென்று கொண்டிருந்த பெண்மணி ஆன்னா லீபை திடீரென்று தோன்றிய 2 ரயில் நிலைய ஊழியர்கள் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.

மட்டுமின்றி நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கும் பதிந்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் குறித்த மூதாட்டிக்கு நீதிமன்றம் 2000 யூரோ அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குறித்த ரயில் நிலையத்தில் இருந்து காலி போத்தல்களை அன்னா லீப் சேகரிப்பதற்கு ரயில்வே நிர்வாகம் தடை விதித்திருந்தது.

மட்டுமின்றி அது ரயில்வே நிர்வாக சட்டத்திற்கு புறம்பானது எனவும், மீண்டும் இதுபோன்ற தவறு நேர்ந்தால் வழக்கு தொடுப்போம் எனவும் எச்சரித்திருந்தது.

ஆனால் அரசு உதவித் தொகையை நம்பி மட்டுமே வாழ்ந்துவரும் அன்னா லீப் தனது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டே காலி போத்தல்கள் சேகரிப்பதை தொடர்ந்து வந்தார்.

மட்டுமின்றி ரயில்வே ஊழியர்கள் சிலரே அன்னா லீபின் இந்த நடவடிக்கையை ஊக்குவித்துள்ளது. மேலும் சில ரயில்வே நடத்துனர்களே அன்னா லீபினை தடுத்து நிறுத்தி ரயிலுக்கு உள்ளே குவிந்து கிடக்கும் போத்தல்களை எப்போது சேகரிப்பீர்கள் எனவும் கேட்டுள்ளதாக அந்த மூதாட்டி பரிதாபமாக தெரிவித்துள்ளார்.

அன்னா லீப் மீதான நடவடிக்கை இவ்வாறு இருப்பினும், முனிச் ரயில் நிலையத்தின் உள்ளேயும் வெளியேயும் குவியும் போத்தல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதில் எவரும் கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்துள்ளது.

உண்மையான குற்றவாளிகளை தேடிச்செல்லாத நிர்வாகம் அப்பாவியான தன்னை கடுமையான அபராதம் விதித்து வதைப்பதாக அன்னா லீப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்