புலியை தைரியமாக வீட்டில் வளர்க்கும் குடும்பம்! ஆச்சரிய காரணம்

Report Print Raju Raju in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com

வடக்கு ஜேர்மனி நாட்டில் Saad Rose என்னும் நபர் தன் மனைவி Monica Farell மற்றும் மகன் Dwayne (22) என்பவர்களுடன் வசித்து வருகிறார்.

மிருகங்கள் மீது மிகுந்த அன்பு கொண்ட இக்குடும்பத்தினர் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் மிருக காட்சி சாலை ஒன்றை நடத்தி வருகிறார்கள்.

அங்கு 13 புலிகளும் 5 சிங்கங்களும் இருக்கிறது.

இந்நிலையில் தங்கள் வீட்டிலேயே Elsa என்னும் நான்கு மாத புலிக்குட்டியை வளர்த்து வருகிறார்கள்.

இது குறித்து Monica கூறுகையில், தற்போது எங்களிடம் Elsa புலி குட்டி வளர்ந்து வருகிறது. இது எங்களுக்கு புதிதல்ல, ஏற்கனவே நாங்கள் வீட்டில் புலி மற்றும் சிங்கங்களை வளர்த்துள்ளோம்.

Elsa தற்போது 20 கிலோ எடையுடன் உள்ளது. அதன் நகங்கள் எல்லாம் பெரிதாக வளர்ந்து விட்டன.

எங்கள் குடும்பத்தார் அதனுடன் விளையாடும் போது அதன் நகங்கள் கீராமல் இருக்க தடிசான உடை அணிந்தே விளையாடுவோம்.

இந்த குட்டி புலிக்கென்றே எங்கள் வீட்டில் தனி அறை உள்ளது என கூறியுள்ளார்.

இந்த Elsa குட்டி புலியை வரும் மார்ச் மாதம் Monica தன் மிருக காட்சி சாலையில் கொண்டு விட்டு அங்கு பராமரித்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்