அசத்தலான சிறப்பம்சங்களுடன் வெளியாகும் 4K வீடியோ டிரோன்

Report Print Raju Raju in கஜெட்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

மோட்டோ குரூப் லிலி என்ற பெயரில் அறிமுகம் செய்யவுள்ள புதிய வகை டிரோன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

மோட்டோ நிறுவனம் ஏற்கனவே இதே போன்ற டிரோனை விற்பனை செய்து வந்தாலும், புதிய டிரோனில் பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளது.

ஒரே ஒரு சிங்கிள் டச்சில் இயங்கும் இந்த டிரோனை ஸ்மார்ட்போன் செயலி மூலமும் கட்டுப்படுத்தலாம். இந்த டிரோனின் மூலம் 4K வீடியோவை பதிவு செய்யலாம்.

இது தானாகவே டிராக்கிங் செய்து நமக்கு தேவையானதை வீடியோ படம் எடுத்து கொடுக்கும் தன்மை கொண்டதாகும்.

கடந்தாண்டு இந்த லிலி டிரோனை மோட்டோ நிறுவனம் திடீரென திரும்ப பெற்ற நிலையில் வாடிக்கையாளர்களின் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு சுமார் $30 வரை திருப்பி கொடுக்க சம்மதம் தெரிவித்தது.

முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டு பணம் திருப்பி கொடுக்கும் நடைமுறைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

தோல்விக்கு பின்னர் மீண்டும் அதே பெயரில் வெளியாகவுள்ள இந்த புதிய டிரோனுக்கு பலத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

டிரோனின் விலை $699 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும், முன்பதிவு செய்பவர்களுக்கு $499 என்ற விலைக்கே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கஜெட்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்