பாதுகாப்பு செலவை அதிகரித்த பிரான்ஸ் ஜனாதிபதி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

கடந்த பத்தாண்டுகளாக பாதுகாப்புத்துறைக்கான செலவுகளில் இருந்த வெட்டுகளைக் குறைத்து 2025 ஆம் ஆண்டு வரைக்குமான ராணுவ பட்ஜெட்டிற்கு கிட்டத்தட்ட 300 பில்லியன் யூரோக்கள் வரை பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் 1.7 சதவிகிதமாக இருந்த பாதுகாப்புத் துறைக்கான செலவு இந்த ஆண்டு 2 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று அவர் வாக்களித்துள்ளார்.

2022 வரை ஆண்டுதோறும் 1.7 பில்லியன் யூரோக்கள் அதிகரித்து அதன் பின் 3 பில்லியன் யூரோக்களாக்கப்படும். இந்த ஆண்டு மட்டும் 5.6 சதவிகித உயர்வு, அதாவது 34.4 பில்லியன் யூரோக்கள் பாதுகாப்புத்துறைக்காக செலவிடப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அதேபோல் பிரான்சில் மீண்டும் ராணுவ சேவை கட்டாயமாக்கப்படுகிறது.

தனது “பொது தேசிய சேவையில்” இனி இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் மூன்று முதல் ஆறு மாதங்கள் சேவை செய்ய வேண்டும் என்று Macron கூறியுள்ளார்.

இந்த திட்டம் சுமார் இருபது ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமலிருந்தது. தற்போது 2019 முதல் மீண்டும் அந்த திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது.

இதன்படி 600,000 முதல் 800,000 இளைஞர்கள் வரை இனி ஒரு ஆண்டு ராணுவப்பயிற்சி எடுக்க வேண்டும். இதற்கான நிதி எதிலிருந்து வழங்கப்படும் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்