பிரான்ஸ் மக்களின் வெறுப்பை சம்பாதித்த துணிக்கடை

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்சில் துணிக்கடை ஒன்றின் முன் விற்பனையாக துணிகள் கிழித்துப் போடப்பட்டிருந்ததற்கு பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

சனிக்கிழமையன்று ஷாப்பிங் செய்வதற்காக சென்ற Nathalie Beauval, Celio என்ற பெயர் கொண்ட ஆண்களுக்கான உடைகளை விற்பனை செய்யும் அந்தக் கடையின் முன்னும் ஷட்டரிலும் துணிகள் வெட்டப்பட்டும் கிழிக்கப்பட்டும் கிடப்பதைக் கண்டார்.

ஏற்கனவே பிரான்சில் கடுங்குளிர் நிலவி வரும் நிலையில் அந்தக் கடை இவ்வாறு செய்திருப்பதைக் கண்டு கோபமுற்ற அவர் அதைப் புகைப்படம் எடுத்து தனது Facebookஇல் பதிவிட்டார்.

இது வரை 20000 முறைப் பகிரப்பட்ட அந்தப்பதிவுக்கு ஆயிரக்கணக்கான விமர்சனங்களும் கண்டனங்களும் குவிந்து வருகின்றன.

எத்தனையோ வீடில்லாத, புதுதுணிகள் வாங்க கஷ்டப்படும் மக்களுக்கு இதை வழங்கியிருக்கலாம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் கடை நிர்வாகமோ கிழித்துப் போடப்பட்ட அந்தத் துணிகள் பயன்படுத்த இயலாத நிலைமையில் உள்ளவை,

அவற்றில் துளைகளும் கிழிசல்களும் கறைகளும் இருந்ததாகவும், அவ்வாறு பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள உடைகளை கிழித்துப் போடுவதுதான் தங்கள் கொள்கை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்