பிரான்சில் ஒரு மணிநேரத்திற்கு ஒருவர் தற்கொலை: அதிர்ச்சித் தகவல்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

பிரான்சில் பல்வேறு காரணங்களால் ஒரு மணி நேரத்திற்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் தேசிய தற்கொலை மேற்பார்வை அமைப்பு, 2003க்கும் 2014க்கும் இடையில் தற்கொலைகளின் எண்ணிக்கை 26 சதவிகிதம் குறைந்துள்ளதாக ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.

ஆனால் இந்த செய்தியைக் கேட்டு மகிழ முடியவில்லை, காரணம் 2014ஆம் ஆண்டில் மட்டுமே 8885 பேர் தற்கொலை செய்துகொண்டிருந்தார்கள். இதன் பொருள் ஒரு நாளைக்கு 24 பேர், அதாவது ஒரு மணி நேரத்திற்கு ஒருவர்.

இந்த எண்ணிக்கை தோராயமானதுதான், ஏனென்றால் இது அதிகாரப்பூர்வமாக எண்ணிக்கை மட்டுமே, உண்மையில் அது 10000ஆகக்கூட இருக்கலாம்.

பிரான்சில் பெண்களைவிட அதிக ஆண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆண்கள் 100000பேருக்கு 23.1 என்றால், பெண்கள் 6.8 மட்டுமே.

குறிப்பாக விவசாயிகளும் பொலிசாரும் அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள், பள்ளிகளில் பிள்ளைகள் தண்டனைக்கு பயந்து அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

பலர் பிரான்சின் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

தோல்வியிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டுமெயொழிய தோல்விக்காக அவர்களைத் தண்டிக்கக் கூடாது என்கிறார் தற்கொலை குறித்த ஆய்வு சார்ந்த பணியிலிருக்கும் ஒருவர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்