கற்பழிப்புக் குற்றச்சாட்டின்பேரில் பொலிஸ் காவலில் அடைக்கப்பட்ட இஸ்லாமிய கல்வியாளர்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
142Shares
142Shares
lankasrimarket.com

தங்களை இஸ்லாமிய கல்வியாளர் Tariq Ramadan கற்பழித்ததாக இரண்டு பெண்கள் குற்றம் சாட்டியதையடுத்து புதன் கிழமையன்று பொலிசார் அவரைக் கைது செய்து பொலிஸ் காவலில் அடைத்தனர்.

பாரிஸ் பொலிஸ் நிலையம் ஒன்றிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட Oxford பேராசிரியரான Tariq Ramadan பின்னர், கற்பழிப்பு மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக பொலிஸ் காவலில் அடைக்கப்படுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Henda Ayari என்னும் பெண்ணியவாதி 2012 ஆம் ஆண்டு பாரிஸ் ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து Ramadan தன்னைக் கற்பழித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

பெயர் வெளியிட விரும்பாத, உடற்குறைபாடு கொண்ட இன்னொரு பெண்ணும் Ramadan, Lyonஇலுள்ள ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து 2009ஆம் ஆண்டு தன்னைக் கற்பழித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் Harvey Weinstein scandal வெடித்ததையடுத்து, இந்த இரண்டு பெண்களும் எகிப்து நாட்டின் Muslim Brotherhood Islamist இயக்கத்தின் நிறுவனரான Tariq Ramadan மீது கற்பழிப்பு புகார் தெரிவிக்க முன்வந்துள்ளனர்.

இதை ஆவேசமாக மறுத்துள்ள Tariq Ramadan, இது என்னுடைய எதிர்ப்பாளர்கள் எனக்கெதிராக செய்யும் பொய்ப்பிரச்சாரம் என்கிறார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்