பிரான்ஸில் யூத சிறுவன் மீது இனவெறி தாக்குதல்

Report Print Athavan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸில் 8 வயது சிறுவன் யூதர்கள் தலையில் அணியும் தொப்பியான கிப்பா அணிந்தமைக்காக இரண்டு இளைஞர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு பிரான்சின் Sarcelles-ல் நேற்று முன்தினம் இரண்டு இளைஞர்கள், பள்ளி சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த சிறுவனை அருகிலுள்ள மைதானத்தில் வைத்து தாக்கியுள்ளனர்.

சிறுவனின் தலையில் யூதர்கள் அணியும் தொப்பி இருந்த காரணத்தால் தான் தாக்கியதாக குற்றவாளிகள் பொலிசாரிடம் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஜனாதிபதி மேக்ரோன் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், பிரான்ஸில் எந்த ஒரு குடிமகனும் அவரது மதம் மற்றும் தோற்றம் காரணமாக தாக்கப்பட்டால் அது தனிமனித தாக்குதல் அல்ல, மொத்த பிரான்ஸ் நாட்டின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் போல் ஆகும்.

சட்டத்தை மதிக்காமல் யூதர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் தாக்குதல்களில் இருந்து அவர்களை பாதுகாக்க துணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Sarcelles நகர் அதிக யூத மக்கள் நிறைந்த பகுதி ஆகும், இங்கு யூதர்களுக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடப்பது வழக்கம்.

2014 ஆம் ஆண்டு காசா போரின் விளைவாக இங்கு யூதர்களுக்கு எதிராக பெரும் கலவரம் ஏற்பட்டது, இதனால் பல கடைகள் மற்றும் வீடுகள் எரிக்கப்பட்டன. ஆகவே யூதர்கள் பலர் Sarcelles நகரை விட்டு இஸ்ரேலுக்கு குடியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்