பாரிஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 4 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான நகைகள் மீட்பு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பாரிசில் புதனன்று Ritz ஹோட்டலில் கோடாரிக் கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த புதன் கிழமை ஐந்து பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் ஒன்று பாரிசின் Ritz ஹோட்டலின் கண்ணாடிகளை உடைத்து 4 மில்லியன் யூரோக்கள் மதிப்புடைய நகைகளைக் கொள்ளையடித்தது.

தப்பியோட முயன்றவர்களில் மூன்று பேர் பிடிபட்டனர், இருவரைப் பிடிக்க முடியவில்லை.

பிடிபட்டவர்களிடமிருந்து நகைகளில் ஒரு பகுதியை பொலிசார் மீட்டனர். இந்நிலையில் இன்னும் பல நகைகளும் கைக்கடிகாரங்களும் மீட்கப்பட்டுள்ளன. தப்பியோடியவர்களில் ஒருவன் தவற விட்ட ஒரு பையிலிருந்து இவை கிடைத்தன. மீட்கப்பட்ட நகைகளின் மதிப்பு தெரியவில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்