பிரான்ஸில் அரசாங்கம் சார்பாக சிறை அறைகளுக்கு தொலைபேசி இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
பிரான்ஸில் ஐம்பதாயிரம் சிறை அறைகளில் திட்டத்தட்ட எழுபதாயிரத்துக்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
அந்த அறைகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனைகளில் கடந்தாண்டு மட்டும் 19,000 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது பல போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனை தடுக்கும் விதமாக கைதிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசாங்கம் சார்பில் பல புதிய நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் முதற்கட்டமாக கைதிகளின் அறைகளுக்கு தொலைபேசி இணைப்பு வழங்கிட முடிவு செய்யப்பட்டதால், கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்ட தொலைபேசி இணைப்புகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த தொலைபேசிகள் மூலம் சிறை நிர்வாகத்திடம் முன்னரே அனுமதி பெறப்பட்ட 4 எண்களுக்கு மட்டுமே கைதிகள் தொடர்பு கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.