ஏலத்தில் அடிமைகளாக விற்கப்படும் அகதிகள்: எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம்

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

லிபியாவில் அகதிகள் ஏலத்தில் அடிமைகளாக விற்பனை செய்யப்படுவதை எதிர்த்து பாரீஸில் உள்ள லிபியா தூதரகத்தின் அருகில் பெரியளவிலான போராட்டம் நடைபெற்றது.

பிரபல செய்தி நிறுவனமான சி.என்.என் இது குறித்த விசாரணையை கடந்த அக்டோபரிலிருந்து நடத்தி வருகிறது.

இதில் லிபியாவில் அகதிகள் பலர் ஏலத்தின் அடிமைகளாக விற்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு அனுப்படுவதை நிறுவனம் கண்டுபிடித்தது.

இதை தடுக்காத அரசாங்கத்தை கண்டிக்கும் வகையில் பிரான்ஸின் பாரீஸில் உள்ள லிபியா தூதரகம் அருகில் நூற்றுக்கும் அதிகமானோர் போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர் கூறுகையில், இந்த 21-ம் நூற்றாண்டிலும் மனிதர்களை ஏலத்தில் விடுவது கொடுமையானது என கூறியுள்ளார்.

போராட்டமானது நிறம், மதத்துக்கு அப்பால் மனிதநேயத்தை காப்பதற்காக நடத்தப்படுகிறது என இன்னொரு பெண் கூறியுள்ளார்.

லிபியாவில் அடிமைத்தனம் இல்லை என கூறுவோம் என எழுதப்பட்ட பதாகைகளை போராட்டகாரர்கள் கையில் வைத்திருந்தனர்.

போராட்டகாரர்களை பொலிசார் கண்ணீர் புகை வீசி கலைத்தார்கள்.

இது குறித்த விசாரணையை லிபியா அதிகாரிகள் கடந்த வாரம் தொடங்கினார்கள்.

அனீஸ் அலாசபி என்ற அதிகாரி கூறுகையில், இதில் சம்மந்தபட்டவர்களை பிடிப்பதோடு நிறுத்தமாட்டோம்.

ஏலத்தில் விற்கப்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்டெடுப்போம் என கூறியுள்ளார்.

ஏலமானது லிபியாவின் தலைநகர் டிரிபோலியில் நடக்கிறது. $400 என்ற குறைந்த விலைக்கு கூட பலர் அடிமைகளாக ஏலத்தில் விற்கப்படுகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்