தீவிரவாதத்திற்கு எதிராக பிரான்ஸ்- இந்தியா இணைந்து செயல்பட முடிவு

Report Print Fathima Fathima in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா- பிரான்ஸ் இணைந்து செயல்படுமென இரு நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள் கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜீன் யுவஸ் லீ டிரையன் டெல்லி நேற்று சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார்.

சுமார் ஒருமணிநேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருநாட்டு அமைச்சர்களும் கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய சுஷ்மா சுவராஜ், உலகளவில் தீவிரவாதம் வளர்ந்து வருவது குறித்து வருத்தம் தெரிவித்தோம்.

இதற்கு எதிராக பிரான்சும்- இந்தியாவும் கூட்டாக இணைந்து செயல்படும், இதற்கு ஓரிரு நாடுகள் இணைந்தால் மட்டும் சாத்தியமாகாது, உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்.

தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பவர்களையும், புகலிடம் வழங்குபவர்களையும் கூட்டாக எதிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

இச்சந்திப்பை அடுத்து பிரான்ஸ் அமைச்சர் பிரதமரை சந்தித்து, இரு நாடுகளுக்கிடையே நிலவும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்துள்ளனர், இத்தகவலை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்