அகதிகளை ஒழிக்க மேக்ரான் அரசு முயற்சி: எழுந்துள்ள குற்றச்சாட்டு

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸில் தங்கியிருக்கும் அகதிகளுக்கு அடிப்படை வசதிகளை வேண்டுமென்றே அரசு கொடுக்க மறுப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸில் இயங்கும் இரண்டு தொண்டு நிறுவனங்களும், Doctors without Borders என்ற சேவை அமைப்பும் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில், பாரீஸில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட அகதிகள் சாலையில் படுக்கைகள், போர்வைகள் இல்லாமல் வசித்து வருகிறார்கள்.

உறைபனி ஏற்படும் இந்த குளிர்காலத்தில் இப்படி வெறும் தரையில் படுப்பதால் அவர்களின் உடல் நலம் கடுமையாக பாதிக்கிறது.

உடனடியாக அவர்களுக்கு படுக்கைகளும், போர்வைகளும் கொடுக்க அரசும் அதிகாரிகளும் முன்வர வேண்டும்.

இதோடு இரவில் பொலிசார் வேண்டுமென்றே அகதிகளிடத்தில் சென்று அவர்களின் போர்வைகளை எடுத்து சென்றுவிடுகிறார்கள்.

அகதிகள் மற்றும் குடியேறியவர்கள் தங்கள் அடிப்படை தேவைகளை அணுகுவதை கூட அரசாங்கம் கடினமாக்கியுள்ளது.

பாரிஸ் அகதிகள் மோசமான நிலையில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இம்மானுவேல் மேக்ரான் அரசு அகதிகளை காணாமல் போக செய்யவும், ஒழித்து கட்டவும் முயல்கிறது.

தங்க இடம், தண்ணீர், உணவு, சுகாதாரம் போன்ற அடிப்படை விடயங்களும் மறுக்கப்படுகின்றன.

அகதிகள் மற்றும் குடியேறியவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகளை அரசு உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்