பிரான்சில் பாலியல் ரீதியான புகார்கள் அதிகரிப்பு

Report Print Fathima Fathima in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com

பிரான்சில் பாலியல் தாக்குதல் தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் மாதத்தை காட்டிலும் இந்தாண்டு அக்டோபர் மாதம் மட்டும் 445 புகார்கள் அதிகம் வந்துள்ளது, அதாவது 26 சதவிகிதம் அதிகமான புகார்கள் வந்துள்ளன.

பாலியல் துன்புறுத்தல், பாலியல் பலாத்காரம், தகாத வார்த்தைகள் கொச்சைப்படுத்துதல் உட்பட பல பிரிவுகளில் புகார்கள் வந்துள்ளன.

இதனை உள்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள நிலையில், புகார்கள் வருவது வரவேற்க்கத்தக்க ஒன்று என காவல்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்க திரைப்பட இயக்குனர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீதான புகாரை தொடர்ந்து பிரான்சிலும் பேரணி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்