பாரிசில் வெடிகுண்டு அச்சுறுத்தல்: பொதுமக்களை வெளியேற்றிய பொலிஸ்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் பிளேஸ் வெண்டோம் பகுதியில் மர்ம லொறி ஒன்றை கண்டெடுத்த நிலையில் அப்பகுதி மக்களை பாதுகாப்பு கருதி பொலிசார் வெளியேற்றி வருகின்றனர்.

மத்திய பாரிஸ் பகுதியில் அமைந்துள்ள பிளேஸ் வெண்டோம் பகுதியில் சந்தேகத்துக்குரிய லொறி ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.

இதனையடுத்து பொலிசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு கருதி அப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

மட்டுமின்றி குறித்த பகுதியின் அருகாமையில் இருக்கும் மக்களையும் சமூக வலைதளம் வாயிலாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

பிளேஸ் வெண்டோம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் லொறி ஒன்று காணப்படுவதாகவும், அது பயங்கரவாத செயலா என்பது குறித்து பொலிசார், வெடிகுண்டு நிபுணர்கள் குழு என விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த தொடர் பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து பிரான்சில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

2 ஆண்டுகளுக்கு முன்னர் 130 பேரை பலிவாங்கிய பாரிஸ் தாக்குதலின் நினைவு தினத்தை பொதுமக்கள் நேற்றைய தினம் அனுசரித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்