ச்சீ.. இப்படியும் ஒரு மனிதரா? குப்பைகளுடன் வினோத வாழ்க்கை

Report Print Kabilan in பிரான்ஸ்
248Shares
248Shares
lankasrimarket.com

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜியான் என்பவர் வீடு முழுவதும் குப்பைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

தொழில்நுட்ப வல்லுநராக வேலை பார்த்த ஜியான் Senile Squalor Syndrome என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டார்.

ஏற்கனவே குப்பைகளை வீட்டிற்குள் வைத்துக் கொள்ளும் மோசமான பழக்கத்தைக் கொண்டிருந்த ஜியான் இந்த குறைபாட்டின் மூலம் மேலும் மோசமாகியுள்ளார்.

தனது வீட்டில் சமையலறை, உணவறை என அனைத்து அறைகளிலும் சாப்பிட்ட குப்பைகள், பிளாஸ்டிக் பாத்திரங்கள், எலும்புகள், அழுகிய காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகிய குப்பைகளையும்

புத்தகங்கள், செய்தித்தாள்கள், தபால்கள் ஆகியவற்றை மேற்கூடத்திலும், கழிவறைகளில் பிளாஸ்டிக் டப்பாக்கள், துணிகள் முதலியவற்றையும் வைத்துள்ளார்.

இந்த குப்பைகளுக்கு நடுவே உறங்கி வருகிறார் 60 வயதாகும் ஜியான்.

அவரின் மனம் இதற்கு பழக்கப்பட்டு விட்டதால் சுகாதாரம் குறித்து அவர் கவலை கொள்வதில்லை.

அரசாங்கத்திலிருந்து ஆட்களை வரவழைத்து ஆண்டுக்கு ஒருமுறை குப்பைகளை அப்புறப்படுத்தி விடுவதாகவும், அவரின் குறைபாட்டை ஆவணப்படுத்தும் விதத்தில் ஒளிப்படங்களை எடுத்து வருவதாகவும் கூறுகிறார் ஒளிப்படக் கலைஞர் அர்னாட் சோசோன்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்