வெறும் ஒரு யூரோவில் பிரான்ஸில் வீடு வாங்க வாய்ப்பு

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
Seylon Bank Promotion
advertisement

சமூக வீட்டு பங்குகளிலிருந்து கைவிடப்பட்ட 18 வீடுகள் வெறும் ஒரு யூரோவுக்கு விற்பனை செய்யப்படவுள்ள நிலையில், வீடு வாங்குபவர்களுக்கு சில முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் உள்ள Roubaix நகரில் அமைந்திருக்கும் 18 வீடுகள் ஒரு யூரோவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளன.

advertisement

ஆனால் குறித்த வீடுகள் பிரான்ஸின் முக்கியமான மற்றும் வளமான நகரில் அமைந்திருக்கவில்லை.

Roubaix என்ற ஏழ்மையான மற்றும் வேலையில்லா திண்டாட்டம் அதிகம் உள்ள நகரில் தான் வீடுகள் அமைந்துள்ளன.

இந்த வீடுகளை வாங்க நினைப்பவர்களுக்கு சில முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது, வீட்டை வாங்கிய நபர் ஒருவருடத்துக்குள் அதை தனது சொந்த செலவில் புதுப்பிக்க வேண்டும்.

வீடு நன்றாக புதுப்பிக்க பட்டுள்ளதா என கவுன்சில் அதிகாரிகள் சோதனை செய்வார்கள்.

அதன் பின்னரே குறித்த வீட்டில் அதை வாங்கியவர் வாழ முடியும்.

இதோடு, வாங்கிய வீட்டில் குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகளாவது வாழ்வேன் என உறுதியளிக்க வேண்டும்.

மேலும், வீட்டை வாங்குபவருக்கு குடும்பம் இருப்பதோடு, அவர்கள் அந்த வீட்டில் தங்க வேண்டும் மற்றும் வீட்டை வாங்குபவர் அதற்கு முன்னர் வேறு வீடுகளை வாங்கியிருக்க கூடாது.

இந்த நிபந்தனைகளுக்கு தயாராக இருப்பவர்கள் அதற்கான இணையதள முகவரியில் மற்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்