சாலை விதிகளை மீறும் மக்களால் அரசுக்கு பில்லியன் யூரோ வருவாய் குவியும் வாய்ப்பு

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com

பிரான்ஸில் சாலை விதிகளை மீறுபவர்களிடமிருந்து ஒரு பில்லியன் அளவிலான பணம் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டு அரசு கருவூலத்திற்கு அடுத்த ஆண்டு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுகிறது. வாகனங்களை வேகமாக இயக்கும் காரணத்தால் 32 சதவீதம் பேர் பிரான்ஸில் உயிரிழக்கிறார்கள்.

அரசு கூறிய அளவை விட வேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் இதர போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் நிலையில், அடுத்தாண்டு அபராத தொகையாக அரசுக்கு ஒரு பில்லியன் யூரோ கிடைக்கும் என அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2012-ல் இருந்த அரசு, போக்குவரத்து சட்டங்களை கடுமையாக்கியது. 2020-ஆம் ஆண்டுக்குள் பிரான்ஸில் விபத்தில் பலியாவோர் எண்ணிக்கையை 2000-க்கும் குறைவாக ஆக்குவோம் என அப்போதைய அரசு கூறியது.

ஆனால் கடந்த மூன்று வருடங்களாக சாலை விபத்தில் இறப்போரின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது, கடந்த வருடம் மட்டும் 3477 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தார்கள்.

பிரான்ஸின் தற்போதைய ஜனாதிபதி மேக்ரான் பல்வேறு புதிய சாலை பாதுகாப்பு திட்டங்களை கடந்த மாதம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்